தினேஷ் கார்த்திக்கின் ஸ்டம்பை தெறிக்கவிட்ட அஸ்வின்... பெருமையுடன் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்டெம்பை தெறிக்க வீட்ட வீடியோவை அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் எப்படி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறதோ, அதே போன்று கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இதிலும் ஐபிஎல்லைப் போன்று வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடி வருகின்றனர், அந்த வகையில் தினேஷ்கார்த்திக் விளையாடும் காரைக்குடி அணியும், அஸ்வினின் திண்டுக்கல் அணியும் மோதியுள்ளன.

அதில் முதல் பந்தை வானவேடிக்கை காட்டிய தினேஷ்கார்த்திக்கை அடுத்த பந்திலே, அஸ்வின் தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.

இதை அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்