இந்திய அணியின் பலமே அவர் தான்! நெகிழ்ந்த அணித்தேர்வாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியின் பலமே டோனி தான் என்று அணித்தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

டோனியின் துடுப்பாட்டம் மீதான விமர்சனம் உலகக் கோப்பை தொடர் முடிந்ததில் இருந்து பேசப்பட்டு வருகிறது. அத்துடன் அவரது ஓய்வு குறித்து பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை புறக்கணித்த டோனி, காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், டோனி குறித்து இந்திய அணியின் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘குறுகிய ஓவர் போட்டிகளில் இப்போது டோனி சிறந்தவராகவே விளங்குகிறார். உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராகவும், துடுப்பாட்ட வீரராக சிறப்பாகவும், அணியின் பலமாகவும் இருந்தவர் நிச்சயம் டோனி தான்.

Andrew Boyers/Reuters

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கின்றன. இதில் டோனி இருப்பாரா என கேட்கிறார்கள். ஆனால், அணியின் தேவைக்கேற்ப விளையாட, ரிஷப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். அவருக்கு அதிக நம்பிக்கையை கொடுப்பதற்காக செயல்பட உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்