பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றத்திற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.
இதற்கான பணிகளை மேற்கொள்ள கபில் தேவ் தலைமையில் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தொடர விரும்பம் தெரிவித்திருந்தார். இதற்கு தேர்வுகுழு உறுப்பினர் கெய்க்வாட் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கபில் தேவ் கேப்டன் விராட்கோலியின் கருத்துக்கு நிச்சயம் மதிப்பளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.