கோஹ்லியை நீக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக்க வேண்டுமா? பாகிஸ்தான் புயல்வேக பந்துவீச்சாளரின் பதில்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை நீக்கிவிட்டு, ரோஹித் ஷர்மாவை கேப்டன் ஆக்க வேண்டும் என்ற சர்ச்சை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேறியதைத் தொடர்ந்து, விராட் கோஹ்லியின் தலைமை குறித்து விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கருத்துக்களை கோஹ்லி கேட்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோஹ்லிக்கு ஆதரவாக சிலரும், ரோஹித்துக்கு ஆதரவாக சிலரும் அணிக்குள்ளேயே செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. அத்துடன் கோஹ்லியை நீக்கிவிட்டு, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

ஆனால், தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கோஹ்லி கூறியிருந்தார். இந்நிலையில், இந்தப் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறுகையில்,

‘கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. மூன்று வித கிரிக்கெட்டுக்கும் கோஹ்லியே கேப்டனாக தொடர வேண்டும். கோஹ்லியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

அவருக்குத் தேவை சிறந்த பயிற்சியாளர், சிறந்த தேர்வுக்குழு. இது சரியாக இருந்தால் அணியை இன்னும் சிறப்பாக வழி நடத்துவார். அதே நேரம் ரோஹித் ஷர்மாவும் சிறந்த வீரர். மும்பை இண்டியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் தான். இருந்தாலும் விராட் கோஹ்லியை நீக்கினால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்