புயல்வேக பந்துவீச்சில் மிரட்டிய பிராட்.. தனியாளாய் போராடி மீட்ட ஸ்டீவ் ஸ்மித்! ஆஷஸ் டெஸ்ட்

Report Print Kabilan in கிரிக்கெட்
178Shares

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தினால் அவுஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியாக, இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டி அமைந்துள்ளது. பர்மிங்காமில் நேற்று தொடங்கிய போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி டேவிட் வார்னர், பான்கிராப்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் தனது புயல்வேகப் பந்துவீச்சில் இருவரையுமே சொற்ப ஓட்டங்களில் வெளியேற்றினார். பின்னர் வந்த கவாஜாவை (13) கிறிஸ் வோக்ஸ் அவுட் ஆக்கினார்.

AP

இதனால் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என தள்ளாடியது. அதனைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 99 ஆக உயர்ந்தபோது, ஹெட் (35) ஆட்டமிழந்தார்.

ICC Twitter

அதன் பின்னர் வீரர்கள் வோக்ஸ், பிராட் இருவரின் மிரட்டலான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதற்கிடையில் நங்கூரம் போல் நின்று ஆடிய ஸ்மித் சதமடித்தார். இது அவருக்கு 24வது டெஸ்ட் சதமாகும்.

அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த பீட்டர் சிடில் 44 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். தனியாளாய் போராடிய ஸ்டீவ் ஸ்மித் 144 ஓட்டங்கள் குவித்து, கடைசி விக்கெட்டாக பிராட் பந்துவீச்சில் போல்டானார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும்.

ICC Twitter

அவுஸ்திரேலிய அணி 80.4 ஓவரில் 284 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் எடுத்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்