இந்திய பயிற்சியாளராக எனக்கும் ஆசை உள்ளது: மனம் திறந்த நட்சத்திர வீரர்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
187Shares

எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டிகளில் பங்கேற்பதற்காக சுற்றுலா சென்றுள்ளது. ரவிசாஸ்திரியின் பதிவிக்காலம் முடிந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, நான் தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக பதவி வகித்து வருகிறேன். அதோடு அல்லாமல், ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராகவும், கிரிக்கெட் வர்ணனை மற்றும் பிரபலமான பெங்காலி வினாடி வினா நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறேன்.

அதனால் இப்போதைக்கு பயிற்சியாளராகும் எண்ணம் இல்லை. ஆனால் நிச்சயமாக எதிர்காலத்தில் பயிற்சியாளருக்கு விண்ணப்பம் செய்வேன். அதற்காக ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்