டோனி இடத்தை இந்திய அணியில் நிரப்பப் போகும் அந்த வீரர்! இன்றைய போட்டியில் காத்திருக்கும் ஆச்சரியம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் டோனியின் இடத்தில் துடுப்பாட்டம் செய்யப் போகும் அந்த வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ள நிலையில் முதல் போட்டி இன்று நடக்கவுள்ளது. உலகக்கோப்பை அணியில் இருந்து மாறுபட்ட அணியாக இந்தியா களமிறங்க உள்ளது.

அணியில் நடுவரிசையில் இருந்த முக்கிய வீரர்களான டோனி கேதார் ஜாதவ் ஆகியோர் டி20 அணியில் இடம் பெறவில்லை.

Image result for dhoniஇந்த நிலையில் டோனி இடத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி எந்த வீரரை களமிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டோனி களமிறங்கிய ஐந்தாம் இடத்தில் துடுப்பாட்டம் செய்ய மூன்று வீரர்கள் பெயர் கூறப்படுகிறது.

இவர்களில் ஒரு வீரர் தான் முதல் டி20யில் டோனியின் இடத்தில் துடுப்பாட்டம் செய்வார்கள்.

அதிலும் குறிப்பிட்ட ஒரு வீரருக்கு தான் வாய்ப்பு அதிகம், அதில் முதல் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்.

2019 ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்தார். சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக ஆடி சிறப்பாக ரன்கள் குவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடினாலும், இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது இல்லை.

Image result for shreyas iyer

அதனால், தற்போது தனக்கு கிடைத்த வாய்ப்பை இவர் கெட்டியாக பிடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தது மனிஷ் பாண்டே. இவரும் இந்திய அணியில், வருவதும் போவதுமாக இருப்பவர். உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டம் ஆடும் மனிஷ் பாண்டே, சர்வதேச போட்டிகள் என்றால் ஏனோ தடுமாறி விடுவார்.

ஆனால், தற்போது டோனி இல்லாத நிலையில், அணியில் ஏற்பட்டு இருக்கும் வெற்றிடத்தை நிச்சயம் விட மாட்டார் என கருதலாம்.

Image result for manish pandey

இந்த பட்டியலில் மூன்றவதாக இருப்பவர், டோனிக்கு மாற்றாக அணியில் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ள அதிரடி வீரர் ரிஷப் பண்ட்.

நடு வரிசையில் களமிறங்கி வரும் இவரது பேட்டிங் ஸ்டைல் கிட்டத்தட்ட சேவாக் போன்று இருக்கும்.

Image result for rishabh pant

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்