டோனிக்கு பதில் யார்.. ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு மோசமாக இருந்தது: கோஹ்லி ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் ஒவ்வொரு விடியலும் மோசமாக உணர்ந்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோஹ்லி கூறியதாவது, நியூசிலாந்திடம் அரையிறுதி தோல்வியிலிருந்து மீள வீரர்களுக்கு நேரம் பிடித்ததாக விராட் கூறினார். உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது, ஒவ்வொரு முறையும் நாங்கள் காலை எழுந்திருக்கும் போது மிக மோசமான உணர்வாக இருந்தது.

கிரிக்கெட் எங்கள் வாழ்க்கை, ஒவ்வொரு அணியும் இந்த தோல்வியை கடந்து செல்ல தான் வேண்டும், தற்போது நாங்கள் நல்ல மனநிலையுடன் இருக்கிறோம் என கூறினார்.

மேலும், இளம் வீரர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் உடனான சுற்றுப்பயணம் ஒரு நல்ல வாய்ப்பு. டோனி இல்லாத நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் கீப்பர் மற்றும் நடுத்தர வீரராக பிரதானமாக ரிஷாப் பந்த் மீது பொறுப்பு இருக்கும்.

டோனியின் அனுபவம் எங்களுக்கு ஒரு முக்கியமான காரணியாக உள்ளது, ஆனால் ரிஷாப் பந்த் அதிக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும், அவரது திறனைக் காண்பிப்பதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், மேலும் அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நிலையான வீரராக மாற வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்