பாகிஸ்தானின் புதிய அணித்தலைவர் இவர்களா? வெளியான தகவல்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமதுவை மாற்ற வேண்டும் என்று, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் மீதும், அணித்தலைவர் சர்பிராஸ் அகமது மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, அணியின் செயல்பாடுகள் குறித்து மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது. அப்போது, அணித்தலைவர் சர்பிராஸ் அகமதுவை மாற்றிவிட்டு, சுழல் பந்துவீச்சாளர் சதாப் கானை குறுகிய ஓவர் போட்டிகளுக்கு தலைவராகவும், டெஸ்ட் போட்டிக்கு தலைவராக பாபர் அசாமை நியமிக்கலாம் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AP

அத்துடன் இன்னும் 2 ஆண்டுகள் பாகிஸ்தான் அணியில், தான் இருந்தால் அணியை இன்னும் சிறப்பான நிலைக்கு கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த விடயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் வரும் 15ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்