டோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..! ரோகித்தை சமன் செய்த கோஹ்லி: என்ன சாதனைகள் தெரியுமா?

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 65 ஓட்டங்கள் குவித்ததின் மூலம் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார் இளம் வீரர் ரிஷப் பந்த்.

கயானாவில் நடந்த ஆட்டத்தில் மூன்றாவது விக்கெட்டிற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த பந்த் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர், 4 பவுண்டரிகள் அடங்கும்.

டி20 போட்டியில் 65 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் பந்த். இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிராக டோனி அடித்த 56 ஓட்டங்களே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில், செவ்வாயன்று கயானாவில் நடந்த மேற்கிந்தி தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 59 ஓட்டங்கள் அடித்ததின் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான ஐம்பதுக்கும் கூடுதலான ஓட்டங்களை அடித்த ரோகித் சர்மாவின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்