ஆஷஸ் டெஸ்ட்: ஆண்டர்சனைத் தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து வீரர் விலகல்!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2வது டெஸ்டில், ஆண்டர்சனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஒல்லி ஸ்டோனும் விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடக்கிறது. இந்த டெஸ்டில் காயம் காரணமாக, இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வெளியேறினார்.

முதல் டெஸ்டில் 4 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் பாதியிலேயே காயத்தால் வெளியேறினார். இந்நிலையில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ஸ்டோனும் முதுகு வலி காரணமாக, லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்டர்சன் நான்காவது அல்லது 5வது டெஸ்டிற்கு தான் உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்டிற்கு முன்பாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வெளியேறியிருப்பது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

Gallo Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்