இவர் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்! கோஹ்லி யாரை இப்படி சொன்னார் தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ரிஷப் பந்த்தை இந்திய அணியின் எதிர்காலமாக பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் ரிஷப் பந்த்தை அணியின் எதிர்காலமாக பார்க்கிறோம் என்றும் நிறைய திறன்களையும், நிறைய திறமைகளையும் கொண்டவர் ரிஷப் பந்த் என்றும் கோஹ்லி கூறினார்.

மேலும், ரிஷப் பந்துக்கு களத்தில் நெருக்கடி கொடுக்காமல் அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்த போதிய சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றும் கோஹ்லி தெரிவித்தார்.

தற்போது போல தொடர்ந்து விளையாடினால் நிச்சயமாக இந்திய அணிக்கு வெற்றிகளை குவிக்கும் வீரராக ரிஷப் பந்த் நிச்சயம் ஜொலிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்