சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆம்லா!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா ஓய்வை அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரரான ஹாசிம் ஆம்லா இதுவரை 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 18672 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அத்துடன் மொத்தமாக 55 சதங்கள் மற்றும் 88 அரைசதங்கள் ஆகியவற்றை அடித்துள்ளார்.

மேலும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சார்பில் 300 ஓட்டங்களை கடந்த ஒரே வீரர் ஆம்லா தான்.

இந்நிலையில் 36 வயதான ஹாசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஆம்லா, தென் ஆப்பிரிக்கா அணிக்காக நான் விளையாடியதற்கு கடவுளுக்கு நன்றி. இந்தக் கிரிக்கெட் பயணத்தில் நான் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளேன்.

அத்துடன் கிரிக்கெட் வாழ்வில் நல்ல நண்பர்கள் பலரையும் சம்பாதித்துள்ளேன்.

எனது கிரிக்கெட் பயணத்திற்கு உதவியாக இருந்த எனது தாய் மற்றும் தந்தைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல என்னுடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் என்னை எப்போதும் ஊக்குவித்த ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2000, 3000, 4000, 5000, 6000, 7000 ஆகிய ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனைக்கு ஹாசிம் ஆம்லா சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers