எதிரணி தலைவரின் பிறந்தநாளை மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்! பாராட்டுகளை அள்ளும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை மைதானத்தில் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் நேற்று தினம் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படையின் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்ட கேன் வில்லியம்சன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கேக் வெட்டி தனது 29 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

கேன் வில்லியம்சனின் இந்த செயலானது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், பல வீரர்களில் இந்த செயலுக்காக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...