நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வருகிற 14ஆம் திகதி காலேவில் தொடங்குகிறது.

இதற்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணிக்கு திமுத் கருணரத்னே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

 • திமுத் கருணரத்னே
 • ஏஞ்சலோ மேத்யூஸ்
 • தினேஷ் சண்டிமால்
 • லஹிரு திரிமன்னே
 • குசால் மெண்டிஸ்
 • குசால் பெரேரா
 • நிரோஷன் டிக்வெல்ல
 • தனஞ்ஜெய டி சில்வா
 • அகிலா தனஞ்ஜெய
 • எம்பல்டேனிய
 • சுரங்கா லக்மல்
 • லஹிரு குமாரா
 • ஒஷாடா பெர்னாண்டோ
 • லக்ஷன் சண்டகன்
 • விஷ்வா பெர்னாண்டோ

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்