டோனிக்கு எதிராக கொந்தளித்த மக்கள்... வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனிக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கோஷமிட்டதாக கூறி பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி, இரண்டு மாதங்கள் இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து டோனி தற்போது காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரேதேசங்களாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்தை பறித்ததற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தற்போது காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதிக்கு சென்ற போது அங்கிருந்த மக்கள் பூம் பூம் அப்ரிடி என கோஷமிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியானதால், அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ஆனால் இந்த வீடியோ பாகிஸ்தான் ஊடகத்தால் கடந்த 2017-ஆம்ஆண்டு வெளியிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரில் நடத்திய கிரிக்கெட் போட்டிக்கு டோனியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அப்போது ரசிகர்கள் பூம் பூம் அப்ரிடி என கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்