நீங்கள் அழகாக இல்லை என்று கூறிய நபர்.. ஆச்சரிய பதிலடி கொடுத்த இங்கிலாந்து வீரர்! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

தன்னை அழகாக இல்லை என்று கூறிய நபருக்கு, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆச்சரிய பதிலடி கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூற, ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் சில பிரபலங்கள் பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் சேனலையும் வைத்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் புதிதாக யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

அதில் தான் சிறப்பாக விளையாடிய தருணங்கள், கார் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இந்த பகிர்வுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நபர் ஒருவர் வீடியோவுக்கு கீழ், ‘நீங்கள் அழகாக இல்லை’ என்று Comment செய்தார்.

ஆனால், அதற்கு கோபப்படாமல் பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்ச்சர் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ‘ஆனால் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்’ என்று தன்னை விமர்சித்து நபருக்கு தெரிவித்தார். ஆர்ச்சரின் இந்த பக்குவமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்