கிரிக்கெட்டில் உலகில் ஜாம்பவான் பட்டத்திற்கு தகுதியானவர் கோஹ்லி! முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஜாம்பவான் என்ற பட்டத்திற்கு தகுதியானவர் என, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக் கேட்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மும்பையில் உள்ள கிளப் ஒன்றில் Fortune Turner என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை சச்சின் பஜாஜ், ஆதித்ய பூஷண் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த புத்தகம் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான பிஷன் சிங் பேடி, பி.சந்திரசேகர், எரப்பள்ளி பிரசன்னா மற்றும் எஸ்.வெங்கட்ராகவன் ஆகியோரை பற்றியது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக் கேட்டிங் இந்த விழாவில் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளினார்.

அவர் கூறுகையில், ‘ஐ.சி.சி கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

AP

இருவித போட்டிகளிலும் சராசரி 50க்கும் மேல் வைத்துள்ளார். அவர் கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்டுள்ள தீராத தாகத்தினால், அவருக்கு கிரிக்கெட் உலகையும் தாண்டி ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள்.

ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நிலைத்தன்மையோடு விளையாடுவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் விராட் கோஹ்லிக்கு இணையாக விளையாடி வருகின்றனர்.

இருந்தபோதிலும் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவிப்பதில் விராட் கோஹ்லியின் திறமை அசாத்தியமானது. எனவே தற்போது கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் என்ற பட்டத்திற்கு விராட் கோஹ்லி தகுதியானவர். மேலும் எனக்கு டெஸ்ட் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த வீரர் ஆக உருவாக வேண்டுமெனில், முதலில் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கோஹ்லி கூறியுள்ளது அற்புதமானது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers