இந்திய விக்கெட் கீப்பர் ரிஷ்ப பந்த் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் புதிய விதமாக பயிற்சி மேற்கொண்டது இணையத்தில் வைராகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள்-இந்தியா இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து, இரண்டாவது போட்டியில் விளையாட கயனாவில் இருந்த இரு அணிவீரர்களும் டிரினிடாட், குயின்ஸ் பார்க் ஓவலுக்கு சென்றனர்.
இன்று இரு அணிகளும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மோதவுள்ளனர். குயின்ஸ் பார்க் ஓவல் பகுதியில் மழை பொழிந்து வருவதால் இரு அணிகளின் பயிற்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணியில் கெயிலுக்கு இடம்கிடைக்காததால், இன்றைய ஒரு நாள் போட்டியில் அவர் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Where ? When ? What ? Who ? .... No sorry ... I only know the “WHY” :) 🇮🇳 #passion #cricketforlife pic.twitter.com/apOn8A0LoT
— Rishabh Pant (@RishabhPant17) August 11, 2019
இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இருவரும் ஹொட்டல் பால்கனியில் பயிற்சி மேற்கொண்டது வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. குறித்த வீடியோவில் குல்தீப் பந்து வீச பந்த் கீப்பர் கையுறையை அணிந்து பந்தை பிடிக்கிறார்.