ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..! விளக்கம் அளித்த ரெய்னா

Report Print Kabilan in கிரிக்கெட்

முழுங்கால் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னரும், பிரச்சனை தொடர்ந்ததால் 2வது முறையாக operation செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா, தேசிய அணியில் இடம் கிடைக்காததால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு முழங்கால் பிரச்சனை இருந்தது காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரெய்னாவுக்கு, சில மாதங்களுக்கு முன்பு வலி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துமனையில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவர் 4 முதல் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். அதனைத் தொடர்ந்து காலில் கட்டுபோட்டுக்கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படத்தின் ரெய்னா வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் தனது அறுவை சிகிச்சை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ரெய்னா கூறுகையில், ‘அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வருகிறேன். மருத்துவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், விரைவில் குணமடைய வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி. முழங்கால் பிரச்சனை 2007ஆம் ஆண்டு தொடங்கியது.

அப்போது அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். பிறகு தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் பிரச்சனை. கடுமையான வலி. பயிற்சியாளர்கள் எனக்கு அதற்கான உதவிகளை செய்தாலும் பிரச்சனை முடியவில்லை.

இதனால் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது கடினமான ஒன்று. சிகிச்சைக்குப் பின் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பது தெரியும். இருந்தாலும் மீண்டும் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்