முடிந்ததா கெய்லின் டெஸ்ட் வாழ்க்கை? கோரிக்கையை நிராகரித்த மேற்கிந்திய தீவுகள் தேர்வு குழு!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த கிறிஸ் கெய்லின் கோரிக்கையை, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 22ஆம் திகதி தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரரான கிறிஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்று, அணி நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த தேர்வுக்குழு, இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியை அறிவித்துள்ளது.

39 வயதாகும் கிறிஸ் கெய்ல் டெஸ்ட் போட்டியில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7215 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 15 சதங்கள், 37 அரை சதங்கள் அடங்கும்.

ஜேசன் ஹோல்டர்(அணித்தலைவர்), டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ராஸ்டன் சேஸ், ரஹீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், கேப்ரியல், ஹெட்மையர், ஷாய் ஹோப், கீமோ பால், கேமர் ரோச் ஆகியோர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாட உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்