இலங்கை அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட நபருக்கு கிடைக்கும் பெரிய பொறுப்பு? என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்காவை வங்கதேச அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹித்துருசிங்கா அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை அணியின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்த நிலையிலேயே அவர் நீக்கப்பட்டார்.

அதன்பிறகு இடைக்கால பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்கவை நியமித்தது இலங்கைக் கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் ஹத்துருசிங்கவை மீண்டும் வங்கதேச அணியின் பயிற்சியாளராக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது வங்கதேச அணியும் சரியான பயிற்சியாளர் ஒருவர் இல்லாமல் சற்று திண்டாடி வருகிறது.

ஏற்கனவே வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஹத்துருசிங்க 2017ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers