டெஸ்டில் கிடைக்காத இடம்.. ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை நேற்று படைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் தொடர் முடிந்ததும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதில் விளையாட கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. அத்துடன் முதல் டெஸ்டில் விளையாடும் அணியையும் அறிவித்தது. இந்நிலையில், கிறிஸ் கெய்ல் ஒருநாள் போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Getty Images

முன்னாள் அணித்தலைவர் பிரையன் லாரா, அதிக போட்டிகளில் (299) விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையை வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கெய்ல் களமிறங்கினார்.

இதன்மூலம், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தப் போட்டி அவருக்கு 300வது போட்டியாகும். அத்துடன் அதிக ஓட்டங்கள் (10,408) எடுத்த மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற சாதனையை கெய்ல் வைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்