அந்தரத்தில் பறந்து ஒற்றைக் கையில் கேட்ச்.. மிரட்டிய புவனேஷ்வர்குமார்!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் அபாரமாக கேட்ச் பிடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

போர்ட் ஆப் ஸ்பெயின் நேற்றைய தினம் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 31 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் அவர் 35வது ஓவரை வீசியபோது, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரோஸ்டன் சேஸ் எதிர்கொண்டார்.

அவர் எதிர்கொண்ட 5வது பந்தை அடித்தபோது, பந்தை வீசிய புவனேஷ்வர்குமார் துரிதமாக செயல்பட்டு, அந்தரத்தில் பறந்தபடி இடக்கையால் கேட்ச் பிடித்து அசத்தினார்.

அவரது இந்த கேட்ச் மைதானத்தில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்