எனது நெருக்கடியை இவர் தான் குறைத்தார்! கோஹ்லி மனதார பாராட்டியது யாரை தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் அய்யர் துடுப்பட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், எங்களது துடுப்பாட்டம் நல்ல முறையில் அமைந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் அதிக ஓட்டங்கள் எடுக்கவில்லை.

எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் அந்த பொறுப்பை ஏற்று அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டியது அணிக்கு அவசியமானதாக இருந்தது. அந்த பொறுப்பை ஏற்று நான் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை மிகுந்த வீரர். அவரிடம் சரியான அணுகுமுறை இருக்கிறது. அவர் அணியின் உத்வேகத்தை தக்க வைத்ததுடன் எனது நெருக்கடியையும் குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்