தன்னைத் தானே கிண்டல் செய்துகொண்ட சேவாக்கிற்கு குவியும் பாராட்டு!

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, தன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்கை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், கடந்த 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடினார். பெரும் சவாலாக இருந்த அந்த தொடரில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத அவர், 3வது போட்டியில் விளையாட பர்மிங்ஹாம் வந்தார்.

ஆனால், இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் இருவரும் அவரை இரு இன்னிங்சிலும் ஆட்டமிழக்க செய்தனர். மேலும் இந்திய அணி 224 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து 710/7 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 244 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப்போட்டி நடந்த நாளை குறிப்பிட்டு (ஆகஸ்ட் 12) சேவாக் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், ‘இதே நாள்.. 8 ஆண்டுகளுக்கு முன்பாக பர்மிங்காமில் இரு இன்னிங்சிலும் நான் பூஜ்ஜியம். இங்கிலாந்துக்கு வர 2 நாட்கள் பயணம் மற்றும் 188 ஓவர்கள் பீல்டிங் செய்தோம். இதனால் விருப்பமின்றி ஆர்யபட்டாவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று.

ஒருவேளை தோல்விக்கான பூஜ்ஜிய வாய்ப்பு இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதை கண்டுபிடித்திருந்தால், அதை செய்யுங்கள்!’ என தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்