இலங்கை மண்ணில்... முடியாதது என ஒன்றுமில்லை! யாராக இருந்தால் என்ன? மேத்யூஸ் நம்பிக்கை

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து தொடர் மிகச்சவாலாக இருக்கும், ஆனால், இலங்கை மண்ணில் எங்களால் செய்ய முடியாதது என ஒன்றுமில்லை என அனுபமிக்க இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆகத்து 14ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று பயிற்சிக்கு பின்னர் பேட்டியளித்த இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது, இலங்கை அணியில் புதிய வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். லசித் எம்புல்தெனிய மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் குறிப்பாக தென் ஆப்பிரிக்கா போன்ற சவாலான ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக விளையாடி இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்தனர்.

குறித்த வீரர்கள் தங்களால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இதனால், நாம் முன்னோக்கி செல்லும் போது சிறந்த அணியொன்றை உருவாக்க முடியும் என நினைக்கிறேன்.

நியூசிலாந்து தொடர் மிகச்சவாலாக அமையும். ஆனால், நாம் அவுஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளை எமது மண்ணில் வைத்து வீழ்த்தியுள்ளோம். அதனால், எம்மால் செய்ய முடியாதது என ஒன்றுமில்லை. எனவே ஒற்றுமையாக சிறந்த முறையில் விளையாடினால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்