அணியை கட்டமைக்கும் தென் ஆப்பிரிக்க நிர்வாகம்.. டி20 அணிக்கு புதிய அணித்தலைவர் நியமனம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க டி20 அணிக்கு தலைவராக விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 உலகக் கிண்ண தொடரில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை சிறந்த அணியாக மாற்ற அணி நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு டி20 உலகக் கிண்ண தொடரும், 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடரும் நடைபெற உள்ளதால், சிறந்த அணியை கட்டமைக்க அணித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, டெஸ்ட் போட்டிக்கான அணியின் தலைவராக பாப் டூ பிளிசிஸ் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணிக்கு விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரராக குயிண்டன் டி காக் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணிக்கு டெம்பா பவுமா துணைத் தலைவராகவும், டி20 அணிக்கு டஸ்சன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது. இதில் டி20 அணிக்கு டி காக் தலைவராக செயல்படுவார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்