நியூசிலாந்து அணியை துவம்சம் செய்து சாதனை படைத்த இலங்கை... டாப் 5 ரன் சேஸிங் லிஸ்ட்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சாதனை வெற்றி படைத்த நிலையில், டாப் 5 ரன் சேஸிங் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த 14-ஆம் திகதி நடைபெற்றது.

அதன் படி முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் எடுத்தது, அதன் பின் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்கள் குவித்தது.

இதனால் 18 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், களமிறங்கிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 268 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி இலங்கை அணியின் தலைவராக கருணாரத்னே சிறப்பான ஆட்டத்தை கொடுத்து 122 ஓட்டங்களில் வெளியேற, இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்து சாதனை வெற்றி பெற்றி படைத்தது.

இது இலங்கை அணியின் அதிக ரன் சேஸிங் வரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

ஓட்டங்கள்ஓவர்கள் இலக்கு எதிரணிஇடம் ஆண்டுகள்
391/6 114.5 388 ஜிம்பாப்வே கொழும்பு 2017
352/9 113.3 352 தென்ஆப்பிரிக்கா கொழும்பு 2006
326/5 113.5 326 ஜிம்பாப்வே கொழும்பு 1997/98
304/9 85.3 304 தென்ஆப்பிரிக்கா டர்பன் 2018/19
268/4 86.1 268 நியூசிலாந்து கல்லி 2019

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers