டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் கடினமான ஒன்று - விராட் கோஹ்லி

Report Print Kavitha in கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் நிலை குறித்து அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது, “டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் கடினமான ஒன்று இந்த ஆண்டு சரியான தருணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால். டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யம் போதவில்லை என ரசிகர்கள் பலரும் எண்ணுகின்றனர்.

என்னை பொறுத்தவரை 2 ஆண்டுகளில் நல்ல முறையில் போட்டிகளின் தரம் உயர்ந்துள்ளது. இருப்பினும் தனித்தனியாக வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், நாங்கள் ஒரு அணியாக இணைந்து சிறப்பான முறையில் இன்னமும் ஆடவில்லை.

இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் பேட்டிங் சற்று சவாலாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்த போட்டிகளில் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். இதனால் பேட்டிங் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்