இலங்கை டி20 தொடர்: நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சனுக்கு பதிலாக வேறு வீரர் தலைவராக நியமனம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது. 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த நியமனம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டி20 அணி விபரம்: டிம் சவுதி , டாட் ஆஸ்டல், டாம் புரூஸ், கொலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், ஸ்காட் குகலீஜ்ன், டேரில் மிட்செல், கொலின் மன்ரோ, சேத் ரான்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சீஃபர்ட் (வார), இஷ் சோதி, ரோஸ் டெய்லர் .

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்