பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

டி20 அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், ரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை கனடா வீரர் ஒருவர் முறியடித்துள்ளார்.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் கனடா அணியும், கெய்மன் தீவு அணிகள் மோதின. முதலில் ஆடிய கனடா அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய கெய்மன் தீவுகள் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் கனடா அணியின் ரவீந்தர்பால் சிங் 48 பந்துகளில் 101 ஓட்டங்கள் விளாசினார். இதில் 10 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இந்த சதத்தின் மூலம் அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் ரவீந்தர்பால்.

ரிக்கி பாண்டிங் கடந்த 2005ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டி20 போட்டியில் 98 ஓட்டங்கள் விளாசியிருந்தார். இதுதான் அறிமுக டி20 போட்டியில் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையாக இருந்தது.

இந்த 14 ஆண்டுகால சாதனையை தற்போது ரவீந்தர்பால் சிங் முறியடித்துள்ளார். டேவிட் வார்னர் 89 ஓட்டங்களும், கனடாவின் ஹிரால் பட்டேல் 88 ஓட்டங்களும், குவைத்தின் அட்னான் இட்ரீஸ் 79 ஓட்டங்களும் தங்களது அறிமுக போட்டியில் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்