மேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட்.. விராட் கோஹ்லியின் புதிய வியூகம்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆன்டிகுவாவில் தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில், 4 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணியில் 4 பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் என்று விராட் கோஹ்லி புதிய வியூகத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆடுகளத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. Pitch மூடப்பட்டு இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை பார்க்கும்போது, 4 பந்துவீச்சாளர்களுடன் ஆடுவோம்.

GETTY IMAGES

3 வேகப்பந்து வீரர், ஒரு சுழற்பந்து வீரர் அல்லது 2 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற கணக்கில் களம் இறங்குவோம். கடந்த முறை இங்கிலாந்து அணி விளையாடியபோது, பந்து அதிகமாக மேலே எழும்பியது. அதை கவனத்தில் கொள்வோம்.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை தவறுகளில் இருந்து வேகமாக பாடம் கற்பது முக்கியமானது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் தோல்வியில் இருந்து தவறை திருத்தி கொள்ள வேண்டும். தற்போது டெஸ்ட் போட்டிகள் கடும் சவாலாகவே இருக்கிறது. எல்லா போட்டிகளும் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்