முன்கூட்டியே நிறுத்தப்பட்ட இலங்கை அணியின் ஆட்டம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கையின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் இன்று தொடங்கியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களாக திரிமன்னே, கருணரத்னே களமிறங்கினர். ஆட்டத்தின் 15வது ஓவரில் சோமர்வில்லேவின் பந்துவீச்சில் திரிமன்னே(2) ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 32 ஓட்டங்களில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

மறுமுனையில் நிதானம் காட்டிய கருணரத்னே 100 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இலங்கை அணி 36.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் ஓட்டங்கள் எடுக்காமல் களத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்