தலையை தாக்க வந்த பந்து.. முட்டித்தள்ளிய துடுப்பாட்ட வீரர்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

துடுப்பாட்ட வீரர் ஒருவர் bouncer பந்தை எதிர்கொள்ள முடியாமல், தலைகவசத்தால் முட்டித்தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டி ஒன்றில் லெய்செஸ்டர்-துர்காம் அணிகள் மோதின. லெய்செஸ்டர் அணியின் துடுப்பாட்ட வீரர் மார்க் கோஸ்குரோவ், தான் எதிர்கொண்ட bouncer பந்தை தலைகவசம் அணிந்த தலையால் முட்டி Slip திசைக்கு அனுப்பினார்.

அவரது இந்த செயல் கால்பந்து வீரர்கள் தலையால் பந்தை அடிப்பதுபோல் இருந்தது. இந்த வீடியோவை இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பதிவிட்டதுடன், ‘அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஜாப்ரா பந்தை எப்படி எதிர்கொள்வது!..’ என்று கிண்டலாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவுஸ்திரேலிய வீரர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக அவரது bouncer பந்தை எதிர்கொள்வது பல வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதால், பீட்டர்சன் அவர்கள் கிண்டல் செய்யும் வகையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்