கோஹ்லி அணியின் இயக்குநர், தலைமை பயிற்சியாளர் அதிரடி மாற்றம்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் மற்றும் தலைமை பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்திய உள்ளுர் அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநராக மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த சைமன் காடிச், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இப்பதவியில் இருந்த கேரி கிர்ஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்