இலங்கை டி-20 அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்: விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணி உடனான டி-20 தொடருக்கான இலங்கை அணியில் மேத்யூஸ் இடம்பெறாதது குறித்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி தொடங்குகிறது. டி-20 தொடருக்கு 24 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் மேத்யூஸ் பெயர் இடம்பெறவில்லை.

மேத்யூஸ் இடம்பெறாதது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, டி-20 அணியில் மேத்யூஸ் இடம்பெறவில்லை என்பதை பத்திரிகை மூலம் அறிந்தேன்.

எனினும், எனக்கு இதுவரை டி-20 தொடருக்கான அதிகாரப்பூர்வ இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் கிடைக்கவில்லை. அந்த கடிதம் கிடைத்தவுடன் பார்ப்போம். ஆனால், மேத்யூஸ் தற்போது சிறப்பாக விளையாடி வருவதால் அவரை கட்டாயம் அணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என குறிப்பிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்