இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் திடீர் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்

Report Print Kabilan in கிரிக்கெட்

கொச்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கேரள மாநிலம் கொச்சியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சூதாட்ட விவகாரத்தால் ஸ்ரீசாந்த் தடையில் இருந்த நிலையில், சமீபத்தில் அவரது தடையை 7 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியம் குறைத்தது. இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு முதல் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்தின் வீட்டின் முன்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்திலேயே காற்றின் வேகத்தால் வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் பற்றிய தீயை அணைத்தனர்.

இந்த விபத்தின்போது வீட்டில் இருந்த ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

வீட்டின் முன்பக்க அறை தீயில் எரிந்து நாசமானது. இந்நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கொச்சி பொலிசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்