இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்வது உறுதி! வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு சென்று இலங்கை அணி கிரிக்கெட் தொடரில் விளையாடுவது உறுதி என இலங்‍கை கிரிக்கெட் நிறுவன ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் செப்டம்பர் 27,29 மற்றும் அக்டோபர் 2 ல் கராச்சியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 05,07 மறறும் 9 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் போட்டித் தொடர் பொதுவான மைதானத்தில் டிசம்பர் மாதம் நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எப்படியிருந்தாலும் இலங்கை அணி வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும் பாதுகாப்பு விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு செல்லும் பயணம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்