தனியாளாய் போராடி சதம் விளாசிய தனஞ்செய டி சில்வா! கௌரவ ஸ்கோரை எட்டிய இலங்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில், தனஞ்செய டி சில்வா சதம் விளாசியதால் இலங்கை அணி 244 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில், இலங்கை அணி இன்று மூன்றாவது நாளாக முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

தனஞ்செய டி சில்வா நேற்றைய ஸ்கோரான 32 ஓட்டங்களுடனும், தில்ரூவன் பெரேரா 5 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். அஜஸ் பட்டேலின் பந்துவீச்சில் பெரேரா(13) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

எனினும், மறுமுனையில் தனியாளாய் போராடிய தனஞ்செய டி சில்வா சதம் விளாசினார். அவர் 148 பந்துகளில் 2 சிக்சர்கள், 16 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

அவரது பொறுப்பான ஆட்டத்தினால் இலங்கை அணி 244 ஓட்டங்கள் என்ற கௌரவ ஸ்கோரை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. டாம் லாதம் 18 ஓட்டங்களுடனும், ராஸ் டெய்லர் 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

AP Photo/Eranga Jayawardena

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்