மேத்யூஸ் இல்லை.. அணித்தலைவர் மலிங்கா.. அதிகாரப்பூர்வ இலங்கை டி20 அணி அறிவிப்பு!

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்த தொடருக்கான இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணித்தலைவராக லசித் மலிங்காவும், துணைத்தலைவராக நிரோஷன் டிக்வெல்லவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

15 பேர் கொண்ட இந்த அணியை, இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

அணி விபரம்
 • லசித் மலிங்கா (அணித்தலைவர்)
 • நிரோஷன் டிக்வெல்ல (துணைத்தலைவர்)
 • அவிஷ்கா பெர்னாண்டோ
 • குசால் பெரேரா
 • தனுஷ்கா குணதிலக
 • குசால் மெண்டிஸ்
 • ஷெஹன் ஜெயசூர்யா
 • தசுன் ஷனகா
 • வனிந்து ஹசரங்க
 • அகிலா தனஞ்செய
 • லக்‌ஷன் சண்டகன்
 • ஐசுரு உதனா
 • கசுன் ரஜிதா
 • லஹிரு குமார
 • லஹிரு மதுஷன்கா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்