ஐபிஎல் தொடரிலும் ஓரங்கட்டப்படும் தமிழக வீரர் அஸ்வின்: கசிந்தது தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் அஸ்வின், தலைவர் பதவியையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெறுவதையும் இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு ஆட்டங்கள் கொண்ட தொடரின் தொடக்க டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் லெவன் அணியில் இருந்து விலக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இத்தகவல்கள் கசிந்துள்ளது.

அஸ்வினை அணி மாற்றுவது குறித்த பஞ்சாப் அணி தற்போது ஓரிரு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வருவதாக தெரிகிறது. அணிகளின் உரிமையாளர் உறுப்பினர்கள் சந்திக்கும் போது வார இறுதிக்குள் இந்த முடிவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி அஸ்வின் மீது ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிகிறது. இதற்காக அஸ்வினை நேரடியாக ஒப்பந்திக்குமா அல்லது வீரர்கள் பரிமாற்றம் மூலம் அஸ்வின் மாற்றிக் கொள்ளப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

டெல்லியை தவிர ராஜஸ்தான் அணியும் ஆர்வம் காட்டி வருவதாக பஞ்சாப் அணி தரப்பில் தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. கிருஷ்ணப்பா கவுதமை கிங்ஸ் லெவனுக்குக் கொடுத்து விட்டு அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் பெறலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாம்

2018-ல் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினால் ரூ.7.6 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி அணியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையின் கீழ் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் என்றால் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையின் கீழ் அஸ்வின் ஆடலாம். அஸ்வினுக்குப் பதில் கிங்ஸ் லெவன் அணித்தலைராக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்