95 நிமிடங்கள்: அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மே.கி.தீவுகள் வீரர்: டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான சாதனை

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள்-இந்திய இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மிகுவெல் கமின்ஸ், மிக மோசமான துடுப்பாட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி Antigua-வில் உள்ள Sir Vivian Richards மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில். முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 75 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா உள்ளது. மேற்கிந்திய வீரர் கமின்ஸ் 95 நிமிடங்கள் துடுப்பாடி 45 பந்துகளை சந்தித்த கடைசியில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா வீசிய பந்தை, கமின்ஸ் சுழற்ற முயன்ற போது நேராக பவுல்டு ஆகி வெளியேறினார்.

இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக நேரம் மற்றும் பந்துகள் விளையாடி டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் கமின்ஸ் இடம்பிடித்துள்ளார். எனினும், இந்த பட்டியலில் கமின்ஸ் முதலிடத்தை பிடிக்க வில்லை.

இதற்கு முன்பாக நியூஸிலாந்தின் ஆலட் என்பவர் 1999ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 101 நிமிடங்கள் விளையாடி 77 பந்துகள் ஆடி ரன் எடுக்காமல் முடிந்துள்ளார், இவர்தான் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers