பரபரப்பான ஆட்டம்... அவுஸ்திரேலியாவிற்கு ஆப்படித்து வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை தொடரை விட இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணி வீரர்கள் ஆஷஸ் தொடரில் தான் அதிக ஆக்கரோசம் காட்டுவார்கள். இந்த போட்டியினை மக்களும் அதிக ஆர்வத்துடன் விரும்பி பார்ப்பார்கள்.

பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் இந்த வருடத்திற்கான முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியை டிரா செய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து கடும் விமர்சனத்திற்குள்ளானது.

அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக துவங்கிய அவுஸ்திரேலிய அணி 246 ரன்களை குவித்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கினை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.

வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட 359 இலக்கை எட்டிராத இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

துவக்க வீரர்களான ஜேசன் ராய் 8 ரன்களும், பர்ன்ஸ் 7 ரன்களும் எடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரூட், டென்லே பொறுப்பாக விளையாடி 126 ரன்கள் குவித்தனர்.

50 ரன்கள் எடுத்தபோது Hazlewood பந்துவீச்சில் டென்லே அவுட்டாகி வெளியேற, மறுபுறம் ரூட் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணிக்கு ஆறுதல் கொடுத்தார். ஆனால் மறுபுறம் இறங்கிய அனைத்து வீரர்களும் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்திற்கு நடையை கட்டினார்.

ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற பரபரப்பான கட்டத்தினை எட்டியது.

அந்த சமயத்தில் அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் 359 இலக்கை அடைந்து இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers