மேற்கிந்திய தீவு வீரரின் ஸ்டெம்ப்பை காற்றில் தெறிக்கவிட்ட பும்ரா... கீப்பர் அருகில் கிடந்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அசுர வேகத்தில் பந்து வீசி, டேரன் பிராவோவின் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ஆம் திகதி நடைபெற்றது. அதன் படி முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 297 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவு அணி முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது.

இதனால் 75 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரஹானே மற்றும் ஹனுமன் விஹாரியின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பால் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.

இதில் ரஹானே 102 ஓட்டங்களிலும், ஹனுமன் விஹாரி 90 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்த ஆடிய மேற்கிந்திய தீவு அணி வீரர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர். இதில் ரோஸ்டன் சேஷ்(12) மற்றும் கேமர் ரோச்(38) தவிர மற்ற வீரர்கள் ஓற்றை இலக்கம் கூட தாண்டமல் வெளியேறினர்.

இதில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 8 ஓவர்களில் 3 மெய்டன்7 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதில் டேரன் பிராவோவை தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்