கடைசி நேரத்தில் நடுவரின் தவறால் பறிபோன அவுஸ்திரேலியாவின் வெற்றி!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில், கடைசி நேரத்தில் நடுவர் வழங்கிய தவறான தீர்ப்பால் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி பறிபோனது.

லீட்ஸில் நடந்த ஆஷஸ் 3வது டெஸ்டில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைபட்டபோது, ஜாக் லீச்சுக்கு மிக எளிதான ரன்-அவுட் வாய்ப்பை நாதன் லயன் தவறவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் முட்டிப்போட்டு பந்தை விளாச முயன்றபோது, அவரது காலுறையை பந்து தாக்கியது. உடனே அவுஸ்திரேலிய வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டு நடுவரிடம் முறையிட்டனர்.

ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அதன் பின்னர் ரிவி replayயில் பார்த்தபோது, பந்து நடு ஸ்டம்பை துல்லியமாக தாக்குவது தெரிந்தது.

அச்சமயத்தில் அவுஸ்திரேலியாவின் வசம் டி.ஆர்.எஸ் வாய்ப்பு இல்லாததால், நடுவரின் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய முடியவில்லை. ஒருவேளை நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால் அவுஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்