மீண்டும் மேலாடையின்றி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர்.... வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் பெண் கிரிக்கெட் வீரர் சாரா டெய்லர் மேலாடை இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால், தற்போது அது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான சாரா டெய்லர் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தவர். பல பெண்களுக்கு எடுத்துகாட்டாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் Women’s Health என்ற இதழ் பெண்களுக்கான விழிப்புணர்வை பரப்பி வருகிறது.

அதாவது பெண்கள் தங்களை உடல் அளவிலும், மனதளவிலும் எப்படி இருக்க வேண்டும், கவலையிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பதை விளக்கும் வகையில், குறித்த இதழுக்கு சாரா டெய்லர் ஆடையில்லாமல் நிர்வாணமாக, கையில் கிளவுஸ் அணிந்தபடி சமீபத்தில் போஸ் கொடுத்திருந்தார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்டது. இதையடுத்து சாரா தற்போது மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி கையில் க்ளவுஸ் அணிந்து பேட் பிடித்த படி போஸ் கொடுத்துள்ளார்.

அதில், பேட்டிங் செய்ய காத்திருக்கிறேன் என்று குறிப்பிட, இதைக் கண்ட மற்றொரு இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர் அலெக்சாஹார்ட்லி ஆடையில்லாமல் பேட் பிடிக்க காத்திருக்கிறீர்களா என்பது போன்று சாதரணமாக கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது வைரலாக துவங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers