ஓய்வுக்கு முன் கடைசி பந்தை விக்கெட்டாக மாற்றிய இலங்கை வீரர்கள்... வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மலிங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தங்களுடைய இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் விக்கெட் எடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும்.

ஆனால் அவர்கள் நினைக்கும் நேரம் எல்லாம் விக்கெட் விழு வேண்டும் என்றால், அது நினைத்து பார்க்க முடியாது ஒன்று, இருப்பினும் எதிரணியில் துடுப்பெடுத்தாடும் வீரரின் திறமையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் நாம் பந்து வீசினால் விக்கெட் விழும்.

அந்த வகையில் இலங்கை அணியி வீரர்களான முரளிதரன் டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மூன்று வித போட்டிகளிலும் 1347 விக்கெட்டுகள் வீழ்த்தி அரிய சாதனை படைத்துள்ளார்.

இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான முரளிதரன் தன்னுடைய கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியை காலே மைதானத்தில் விளையாடினார்.

அந்த போட்டியில் தான் வீசிய கடைசி பந்தை நன்றாக சுழற்றி டாஸ் பந்தாக வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத பிரக்யன் ஓஜா பேட் கொண்டு தடுக்க முயன்றார். ஆனால் பந்தானது பேட்டில் பட்டு ஸ்லீப்பில் இருந்த மஹேல்லா ஜெயவர்த்தனேவிடம் சென்றது.

அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றி பெரும் சாதனையை படைத்தார்.

முரளிதரன் போன்றே மலிங்கா தன்னுடைய கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியின் கடைசி பந்தில் வங்கதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் முஷ்டபிசுர் ரகுமானை வெளியேற்றினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்