சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

34 வயதான அஜந்தா மெண்டிஸ் 2008ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். கடைசியாக 2015ம் ஆண்டு சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார்.

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம்வந்த அஜந்தா மெண்டிஸ், இலங்கை அணிக்காக 19 டெஸ்டில் 70 விக்கெட்டும், 87 ஒருநாள் போட்டியில் 152 விக்கெட்டும், 39 டி20 போட்டியில் 66 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதேபோல விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையினையும் பெற்றுள்ளார்.

2008ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது இவருடைய தனிச்சிறப்பு.

இந்த நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்