ஓரங்கட்டப்பட்டார் டோனி.. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு: கொந்தளிப்பில் ரசிகர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் டோனி, குல்தீப், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெறவில்லை. துடுப்பாட்ட வீரர்களில் டோனிக்கு பதில் ரிஷப் பந்த் பெயர் இடம்பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியா பெயர் புவனேஷ்வர் குமாருக்குப் பதில் சேர்க்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் இல்லை என்பதால் அணியில் கலீல் அகமெட், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சாஹல் இல்லை என்பதால் ஜடேஜா, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், லெக் பிரேக் பவுலர் ராகுல் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Image

இந்தியா-தென் ஆப்பரிக்கா மோதும் முதல் டி-20 போட்டி தரம்சலாவில் செப்டம்பர் 15ம் திகதி நடைபெறவுள்ளது, அதை தொடர்ந்து செப்.18 மற்றும் 22ம் திகதிகளில் மற்ற இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோகித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குருணால், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமெட், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

டி-20 அணியில் டோனிக்கு வாய்ப்பு அளிக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ள இந்திய ரசிகர்கள் பலர் இனி டோனி இல்லாத கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்